நானும் அஞ்சு நச்சத்திரத்தைத் துடங்கி நாலு பதிவைப் போடயில்லை அதுக்குள்ளை வேலையைக் கொம்பியூட்டர் இல்லாத ஊருக்கு மாத்திப்போட்டாங்கள். கொம்பியூட்டர் இல்லாத ஊரெண்டாலுங்கூடப் பறவாயில்லை ஆனா இந்த பூச்சிக்குளத்துக்குக் கரண்டுகூட இல்லை. படிப்பிக்கிற வேலை ஈசியா இருக்குது எண்டது மட்டுந்தான் பிடிச்சிருக்கு. ரவுன் பிள்ளையள்மாதிரி ஒரு நீயென்ன மசிரை எனக்குப் புடுங்கிறது எண்ட தன்மை பூச்சிக்குளப்பிள்ளையளுக்கு இல்லை. பள்ளிக்கு வந்தால் படிப்புக்கதையும் இயக்கக்கதையும். படக்கதை கொஞ்சம் இருக்கத்தான் செய்யுது. ஆனா படத்தைப் பத்திக் கதையாத ஒரு பள்ளிக்கூடப்பிள்ளையை எந்த ஊரிலையும் காண ஏலாது எண்டுதான் நினக்கிறன்.
திரும்ப ஒரு மாதத்தில ஓடவேணும். இருக்கிற வரைக்கும் அடிக்கிறது பதிவெண்டு சந்தோசப்படவேண்டியதுதான். பதிவுக்கெண்டே வாழ்க்கை, அதுவும் இண்டைக்கோ நாளைக்கோ ஊருக்குள்ள பிரச்சனை வெடிக்குமெண்டு அம்மிக்கொண்டிருக்கிற நேரத்தில. ஆனா இருக்கிற நேரத்தில அஞ்சுமாசப்பதிவுகளையெல்லாம் வாசிக்கலாமெண்டொரு யோசனை.
Friday, July 22, 2005
7/22/2005 02:47:00 PM - காணாமப்போனன்
என்ரை இந்தப்பதிவைத் தமிழ்மணத்திலை தரப்படுத்துங்கோ.
இப்பத்தைய தராதரம்:
மெத்தப்பெரிய உபகாரம்.
© கலை 2005 -
by Blogger Templates