காசிலிங்கம் அண்ணையும் மதி அண்ணையும் சொன்னதுபோல அஞ்சு நச்சத்திரத்தில அஞ்சு நச்சத்திரத்தை ஏத்தியிருக்கிறன். நல்லது கெட்டதைப் பாத்துப் போடுங்கோ. எனக்குக் கருத்துச் சொல்லி ஊக்கமளிச்ச அவைக்கும் வசந்தன் அண்ணைக்கும் கயல்விழி அக்காவுக்கும் மெத்தப்பெரிய உபகாரம். அண்ணை அக்கா எண்டு வயதில கூட இருப்பீங்கள் எண்ட யோசனையோட சொல்லிப்போட்டன். எனக்கு வயசு இந்த வருசம் ஆடி ஏழாந்திகதி பிறக்க இருபத்தைஞ்சு. தற்செயலா என்னை விட வயசு குறைவாய் இருந்தால் கோபிக்கக்கூடாது. வலையில எழுதைக்குள்ள எழுதிறதை வச்சுத்தான் ஆளை மட்டுக்கட்டலாம். அதால உங்கட எழுத்தை வச்சு எனைவிட வயசுகூட இருப்பியள் எண்டு எண்ணுறன். பிழையாய் எண்ணிப்போட்டனெண்டால் திருத்திவிடுங்கோ. வலையில வயசுமட்டுமே, ஆளைப்பாக்காமல் பேரைமட்டும் பாத்து ஆம்பிளையா பொம்பிளையா எண்டுகூடச் சொல்ல ஏலாமக்கிடக்கிடக்கு எண்டு பாலன் அண்ணையும் மாறன் சித்தப்பாவும் எனக்கு என்ரை கலை எண்ட பெயரை வச்சுக் கிடைக்கிற நேரமெல்லாம் நக்கல் அடிக்கிறவை. கலையரசனோ கலையரசியோ கலைமகனோ கலைமகளோ எண்டு உன்ரை தனிக்கலையை வச்சுப் பிடிக்க ஏலாது எண்டமாதிரி நக்கல். அதுக்கு நானென்ன செய்ய ஏலும்? சினப்பிள்ளையிலயிருந்தே கலை கலை எண்டு வாய்க்குள்ள அவசரத்துக்கு வாறதுக்கெண்டும் செல்லமெண்டும் கூப்பிட்டுக் கூப்பிட்டு எனக்கே என்ரை முழுப்பேர் சில நேரத்தில ஆரும் கேட்டா சட்டெண்டு சொல்லவர்றேல்லை எண்டால் நீங்கள் நம்புவியளோ? சத்தியமா மாட்டியள்.
ரெண்டுநாளாப் பள்ளிக்கூடத்துக்குப் போகயில்லை. சரியான தலையிடியும் காச்சலும். போன் பண்ணிப் பிரின்சிப்பலிட்டைச் சொல்லப்பாத்தால் அவரில்லை. பின்னை சுகி அக்காட்டை பிரின்சிப்பலிட்டச் சொல்லச் சொல்லிப் போய்ச் சொல்லியிட்டு வந்தன். போன திங்கள் இரவு வாசிகசாலைக்கூட்டத்துக்குப்போயிட்டுப் பிறகு செந்திவீட்டை போய்க் கதைச்சுப்போட்டு வரேக்கையே கொஞ்ச தலையிடியாத்தான் இருந்துது. நான் அலைஞ்சு திரிஞ்சதால எண்டு விட்டிட்டன். அண்டைக்கு இரவு பாத்தாகொதி கொதி எண்டு கொதிக்குது. ரெண்டு அஸ்ப்ரினை நாலுமணத்தியாலத்துக்கு ஒருக்கா எடுத்துப்போட்டுப் போட்டுப் படுத்தால், எங்கை நித்திரை வருது? எல்லாம் பழைய ஞாபகந்தான் கனவில திரும்ப நடக்கிறதுமாதிரி மூச்சையும் நெஞ்சையும் அமுக்கின படி நடந்தது. அம்மா வந்து கொத்தமல்லி வைச்சுத்தரவோ எண்டால், எனக்குக் காச்சலே பறவாயில்லையெண்டு பட்டுது. கொத்தமல்லிக்கச்சலும் அதைக்குடிச்சு முடிக்க உள்ளங்கையில போட்டு நக்குற சீனியும். ரெண்டுமே அருவெறுப்பு. ஆனா கடைசியில காச்சலின்ரை கரைச்சலும் அம்மாவின்ரை கரைச்சலும் தாங்க ஏலாமச் சரி எண்டு சொல்லிச் சுடச்சுட மூக்கைப் பொத்திக்கொண்டு குடிச்சு முடிச்சன். கூடப்பயந்திருந்தனோ என்னவோ தெரியேல்ல. குடிக்கேக்க கச்சல் ஒண்டும் பெரிசில்லை எண்டு பட்டுது. வாறகிழமை அடுத்த கிழமையில, ரெண்டுநாளும் விட்ட வகுப்புகளை எடுக்கோணும். அது பெரிய தொந்தரவு. இண்டைக்கு மாறன் சித்தப்பாவோட செல்வபுரத்துக்குப் போகோணும். சம்பந்தப்பட்ட ஆக்களின்ரை நாட்டிண்டை ஊரின்ரை பேர்களைச் சொல்லுறது அவைக்குச் சரியில்லைத்தானே. அதால, இங்க மாத்தி எழுதியிருக்கிறன். மிச்சத்தைப் பிறகு வந்து எழுதுறன்.
Friday, February 11, 2005
2/11/2005 04:10:00 PM - ஊக்கமளிச்சவைக்கு உபகாரம்
என்ரை இந்தப்பதிவைத் தமிழ்மணத்திலை தரப்படுத்துங்கோ.
இப்பத்தைய தராதரம்:
மெத்தப்பெரிய உபகாரம்.
Wednesday, February 09, 2005
2/09/2005 10:39:00 PM - மூண்டாம் பதிவு
என்னத்தை எழுதுறதெண்டும் தெரியேல்லை. பாலன் அண்ணை கிளப்பிவிட்ட உசாரில பதிவைத் துடங்கிப்போட்டு, அதுக்குப்பின்னால என்னத்தை எழுதுறதெண்டு முழிச்சிக்கொண்டிருக்கிறன். மூண்டு பதிவு போடாமல், தமிழ்மணத்திலையும் ஏத்தமாட்டினமெண்டு எழுதியிருக்கினம். தமிழ்மணத்தில ஏறாட்டி, அமாவாசை மழை இரவில ஒத்தைக்குயில் வேப்பமரத்தில இருந்து குக்கூ எண்டு தனியக் கவலை அப்ப அப்பக் கூவினமாதிரிமட்டுந்தான் எந்தத்தமிழ்ப்பதிவுமிருக்கும். கப்பலைக்கட்டினால், ஓடுதோ இல்லையோ கடலிலை ஒருக்காலாவது இறக்கிப் பாக்கோணுமெண்ட ஆசை கட்டினவருக்கு வராதோ? அதால இதையே மூண்டாம் பதிவாப் போட்டுடலாமெண்டு நினைக்கிறன்.
பிள்ளை பிறந்தால், ரெஜிஸ்ரார் ஒப்பீஸில அப்பா அம்மா பேர், பிள்ளை பேர், பிறந்த இடம், பாட்டன் பூட்டன் பிறந்த இடமெல்லாம் சொல்லிப் பதியிற மாதிரி, தமிழ்ப்பதிவு வலையில தொடங்கினால், தமிழ்மணத்தில பதிஞ்சு போடோணும். அது பெரிய வசதி. அதால, இதைத் தமிழ்மணத்தில பதியப்போறன். ஆனா, அங்கை ஒரு குழப்பம் வந்திட்டுது. வசிப்பிடம் எண்டுறதுக்கு நேரை, இந்தியதுணைக்கண்டம், ஆசியா எண்டு ரெண்டா இருக்கு. எனக்கு என்ன குழப்பமெண்டால், ஆசியாவுக்குள்ள இந்தியதுணைக்கண்டம் வராதோ? பிறகென்னத்துக்கு இந்திய துணைக்கண்டத்தைத் தனியப் பிடிச்சுப் பிரிச்சுப் போடோணுமெண்டு. ஆனா, நான் என்ரை அஞ்சு நச்சத்திரப்பதிவை ஆசியாவுக்குள்ள போட்டாச் சரியெண்டுதான் படுகுது. அப்பிடியேதான் போடப்போறன்.
இந்த அஞ்சு நச்சத்திரத்தில, எலெக்ஷனிலை வோட் கேக்கிறமாதிரி எனது அஞ்சு நச்சத்திரத்துக்குக் கீழை ஒரு நேர் இல்லை ஒரு மறையெண்டு கேஸரால குத்துங்கோ எண்டு கேக்கிறது கொஞ்சம் அந்தரமான விஷயம்.தமிழ்மணக்காரர் பதிவின் நல்லது கெட்டது அறியிறதுக்காக நச்சத்திரக்கணக்கு வைச்சாலும், இது பதிஞ்ச விதம் நல்லதெண்டு சொல்லுறதா, இல்லை, பதிஞ்ச விஷயம் பிடிச்சிருக்கு எண்டுறதைச் சொல்லுறதா எண்டு தெரியாமல் குழப்புது. அதால, இங்கை நான் அஞ்சு நச்சத்திர இணைப்பைக் குடுக்கேல்லை. இதுக்காண்டிப் பிறகும் குடுக்கமாட்டனெண்டு இல்லை. ஆனா, கொஞ்சம் யோசிச்சுப் பாத்த பிறகு குடுப்பமெண்டு இருக்கிறன்.
அடுத்தபதிவெண்டாச்சும் படியிற மாதிரிப்படிவாப் போடோணுமெண்டு நினைக்கிறன். ஆனா, நினைக்கிறதெல்லாம் நடக்குதோ?

Tuesday, February 08, 2005
2/08/2005 09:33:00 PM - என்னத்தைப் பதியிறது?
குறையில கதையைப் பதியலாமெண்டால், குறை சொல்லுறவன் உள்ளிட எல்லாமே குறையாத்தான் தெரியுது. பேசாமல் என்னில இருக்கிற குறையையே எழுதியிடுவனோ எண்ட பயம் படபடவெண்டு மிதிச்ச புத்திலயிருந்து கறுப்பெறும்பு காலிலை ஏறுறமாதிரி எழும்பி வருகுது. பதிய நாளிலையே முழுவியளமாய்க் குறையையோ எழுதுறதெண்டு சோர்வுதான் உள்ளை வருகுது. எல்லாத்துக்கும்மேலை, இப்பிடிச் சோர்வைச் சொன்னாக்கூடி, அதுக்கும் ஒரு தலைப்புக் குடுக்கவேணுமெண்ட அலுப்பு வேற. பேசாமல், இதிலையே நிப்பாட்டப்போறன். நாளை மிச்சதைப் பாக்கலாம். ஒரு நாள் நான் பதியாமப் போறதால, ஒருத்தருக்கும் ஒரு இழவும் குறையப்போறதில்லை. பாலன் அண்ணை பாத்தாத்தான் சிரிப்பார். அவருக்கென்ன? தடியையும் வாங்கி அடியையும் குடுக்கிற ஆள். ஒரு வீறாப்பிலை தொடங்கிப்போட்டு, இப்ப அம்பிட்டுக்கிடக்கிறது நானெல்லே?
என்ரை இந்தப்பதிவைத் தமிழ்மணத்திலை தரப்படுத்துங்கோ.
இப்பத்தைய தராதரம்:
மெத்தப்பெரிய உபகாரம்.
2/08/2005 09:33:00 PM - நானும் வலைப்பதியலாமெண்டு
இங்கை கடை திறக்கக் காரணம் ஆரெண்டு கேட்டால், பாலன் அண்ணையின்ரை பக்கமாத்தான் கையைக் காட்டுவன். திங்கக்கிழமை சும்மா செக்கைப் போடப் பாங்குக்குப் போனால், கையைப் பிடிச்சு இழுக்காத குறையாய்த் தள்ளிக்கொண்டு போய், வெப்லொக் காட்டுறாராம். உது தெரியுமெண்டன். "ஆளாளைப் பத்தி ஆயிரம் நொட்டை நொள்ளுச் சொல்லிக்கொண்டு திரியிறனி. எழுதன்" எண்டுறார். சொல்லுறனியள் நீங்கள் ஏன் எழுதக்கூடாதெண்டன். "நானே நாள் முழுக்க வாசிக்கிறதிலையும் பாக்கிறதிலையும் பிழை பிடிச்சுக்கொண்டு திரியிறன்?" எண்டு பதில் வருகுது. நேரமில்லை எண்டு சொல்லி ஒரு மாதிரி நழுவியிட்டன். கொடுப்புக்குள்ள அவர் சிரிச்சது எனக்குத் தெரியும். சும்மா சொல்லியிட்டு வந்தாலும், போக வர அவர் பத்த வச்ச பொறி காஞ்ச பொச்சில பட்டுப் பத்திப் பிடிச்சது மாதிரி பக்குப்பக்கெண்டு எரியத்துடங்கியிட்டுது எண்டுதான் சொல்லுவன். முடிவாய், நானும் வலைக்குள்ள தலையைக் குடுக்கலாமெண்டு குதிச்சாச்சு.
தலைப்பு என்ன வைக்கிறதெண்டு தலையைச் சொறிஞ்சால், சொடுகைத் தவிர வேறையண்டும் சொட்டினதாத் தெரியேல்ல. மிச்சப்பேர் எப்பிடி வைச்சிருக்கினமெண்டு பாக்கப்போனால், குப்பைகூளம் துடங்கி கோட்டைகொத்தளம் வரைக்கும் தமிழில தெரிஞ்ச சொல் அத்தனையிலயும் பதியினம். இதுக்குள்ள எண்ணம் எண்டே ரெண்டு மூண்டு பதிவு கிடக்குது. இந்தப்பெயர் பஞ்சத்துக்குள்ள பரம்பரை ஆண்டி நான் என்ன பெயரைப் புடுங்கிறதெண்டு குழம்பிப்போனன். நல்ல காலத்துக்கு அஞ்சு நச்சத்திரம் வோட்டுப் போடச் சொல்லித் தமிழ்மணத்தில கிடக்கிறது கண்ணில பட்டுது. தேடினால், இண்டைக்குவரைக்கும் அஞ்சு நச்சத்திரப்பதிவேதும் இருக்கிறதாத் தெரியேல்லை. என்ரை எழுத்துக்கு எவரும் வோட்டுப்போடாமல் விட்டாலுஞ்சரி, பதிவு அஞ்சு நச்சத்திரப்பதிவாய் எண்டைக்கும் இருக்கட்டுமெண்டு பெயரை வச்சாச்சு. அடுத்தது கிணத்தில குதிச்சப்பிறகு நீந்தப்பழகவேண்டிய அபாயத்தில நிக்கிறன். என்ன பாடுறது? எப்படிப் பாடுறது? பாலன் அண்ணையைக் கேட்டால், "ஆளை அடிச்சு எழுது. அது சரி வராதெண்டால், அத்தினை பேரையும் அணைச்சு எழுது. அதைவிடப் புத்திசாலித்தனமாய் அடிக்கிற பதிவெல்லாம் அப்பிடியே அள்ளிக்கட்டிப் புத்தகமாப் போடுற மாதிரி எழுது" எண்டு கொடுப்புச்சிரிப்போடை விதண்டாவாதம் பேசுவார். "அவருக்கென்ன கூறிவிட்டார். அகப்பட்டது நானல்லவா?" எண்டுதான் பிறகும் நான் பாடிக்கொண்டு திரியவேணும். பேசாமல், ஒண்டு செய்யப்போறன். இண்டைக்கு எதைக் குறை சொல்லோணுமெண்டு முதலிலை படுதோ அதை எழுதப்போறன். வாழ்த்திறதைப் பிறகாச்சும் பண்ணலாம். ஆனால், திட்டுறதைப் பட்டதோட திட்டவேணும். இல்லையெண்டால், திட்டுப் பட்டுப்போகும்.

© கலை 2005 -
by Blogger Templates