<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=10703033&amp;blogName=%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=BLACK&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http%3A%2F%2Fanjsunassaththiram.blogspot.com%2Fsearch&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http%3A%2F%2Fanjsunassaththiram.blogspot.com%2F" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>
அஞ்சு நச்சத்திரம்

அவரவர் பதிவை அவரே தட்டினால் அஞ்சு நச்சத்திரப்பதிவாகுமாம் அது 

Wednesday, February 09, 2005

2/09/2005 10:39:00 PM - மூண்டாம் பதிவு

என்னத்தை எழுதுறதெண்டும் தெரியேல்லை. பாலன் அண்ணை கிளப்பிவிட்ட உசாரில பதிவைத் துடங்கிப்போட்டு, அதுக்குப்பின்னால என்னத்தை எழுதுறதெண்டு முழிச்சிக்கொண்டிருக்கிறன். மூண்டு பதிவு போடாமல், தமிழ்மணத்திலையும் ஏத்தமாட்டினமெண்டு எழுதியிருக்கினம். தமிழ்மணத்தில ஏறாட்டி, அமாவாசை மழை இரவில ஒத்தைக்குயில் வேப்பமரத்தில இருந்து குக்கூ எண்டு தனியக் கவலை அப்ப அப்பக் கூவினமாதிரிமட்டுந்தான் எந்தத்தமிழ்ப்பதிவுமிருக்கும். கப்பலைக்கட்டினால், ஓடுதோ இல்லையோ கடலிலை ஒருக்காலாவது இறக்கிப் பாக்கோணுமெண்ட ஆசை கட்டினவருக்கு வராதோ? அதால இதையே மூண்டாம் பதிவாப் போட்டுடலாமெண்டு நினைக்கிறன்.

பிள்ளை பிறந்தால், ரெஜிஸ்ரார் ஒப்பீஸில அப்பா அம்மா பேர், பிள்ளை பேர், பிறந்த இடம், பாட்டன் பூட்டன் பிறந்த இடமெல்லாம் சொல்லிப் பதியிற மாதிரி, தமிழ்ப்பதிவு வலையில தொடங்கினால், தமிழ்மணத்தில பதிஞ்சு போடோணும். அது பெரிய வசதி. அதால, இதைத் தமிழ்மணத்தில பதியப்போறன். ஆனா, அங்கை ஒரு குழப்பம் வந்திட்டுது. வசிப்பிடம் எண்டுறதுக்கு நேரை, இந்தியதுணைக்கண்டம், ஆசியா எண்டு ரெண்டா இருக்கு. எனக்கு என்ன குழப்பமெண்டால், ஆசியாவுக்குள்ள இந்தியதுணைக்கண்டம் வராதோ? பிறகென்னத்துக்கு இந்திய துணைக்கண்டத்தைத் தனியப் பிடிச்சுப் பிரிச்சுப் போடோணுமெண்டு. ஆனா, நான் என்ரை அஞ்சு நச்சத்திரப்பதிவை ஆசியாவுக்குள்ள போட்டாச் சரியெண்டுதான் படுகுது. அப்பிடியேதான் போடப்போறன்.

இந்த அஞ்சு நச்சத்திரத்தில, எலெக்ஷனிலை வோட் கேக்கிறமாதிரி எனது அஞ்சு நச்சத்திரத்துக்குக் கீழை ஒரு நேர் இல்லை ஒரு மறையெண்டு கேஸரால குத்துங்கோ எண்டு கேக்கிறது கொஞ்சம் அந்தரமான விஷயம்.தமிழ்மணக்காரர் பதிவின் நல்லது கெட்டது அறியிறதுக்காக நச்சத்திரக்கணக்கு வைச்சாலும், இது பதிஞ்ச விதம் நல்லதெண்டு சொல்லுறதா, இல்லை, பதிஞ்ச விஷயம் பிடிச்சிருக்கு எண்டுறதைச் சொல்லுறதா எண்டு தெரியாமல் குழப்புது. அதால, இங்கை நான் அஞ்சு நச்சத்திர இணைப்பைக் குடுக்கேல்லை. இதுக்காண்டிப் பிறகும் குடுக்கமாட்டனெண்டு இல்லை. ஆனா, கொஞ்சம் யோசிச்சுப் பாத்த பிறகு குடுப்பமெண்டு இருக்கிறன்.

அடுத்தபதிவெண்டாச்சும் படியிற மாதிரிப்படிவாப் போடோணுமெண்டு நினைக்கிறன். ஆனா, நினைக்கிறதெல்லாம் நடக்குதோ?


Blogger காசி (Kasi) said...

//தமிழ்மணக்காரர் பதிவின் நல்லது கெட்டது அறியிறதுக்காக நச்சத்திரக்கணக்கு வைச்சாலும், இது பதிஞ்ச விதம் நல்லதெண்டு சொல்லுறதா, இல்லை, பதிஞ்ச விஷயம் பிடிச்சிருக்கு எண்டுறதைச் சொல்லுறதா எண்டு தெரியாமல் குழப்புது. அதால, இங்கை நான் அஞ்சு நச்சத்திர இணைப்பைக் குடுக்கேல்லை//

இப்பத் தெளிவா சொல்லியாச்சே... பின்னால் வருபவர் படிக்க இதில் எதாச்சும் இருக்கா இல்லையாங்கிறதுதான் சொல்றது. 'இது நம்ம ஆட்கள் தவறாமப் படிக்கணும்'னு நினைச்சா 'ப்ளஸ்', 'நம்ம நேரம் கெட்டதோட போகட்டும்'னு நினைச்சா 'மைனஸ்'...அம்புட்டுதேன்  


Blogger வசந்தன்(Vasanthan) said...

நீங்கள் முத்தத்துக்கு எண்டு எழுதி இணைப்புக் குடுத்திருக்கிறது என்னக் குழப்புதுங்கோ. மற்றாக்களையும் குழப்புமெண்டுதான் நினக்கிறன். நல்லாயிருக்கு, தொடர்ந்து எழுதுங்கோ.  


Blogger Garunyan said...

umma tamiz nadai padiccu
enakku adiyilai iruntu silirkutheNdaal paaruman!  


Post a Comment

என்ரை இந்தப்பதிவைத் தமிழ்மணத்திலை தரப்படுத்துங்கோ. இப்பத்தைய தராதரம்:

மெத்தப்பெரிய உபகாரம்.


வலைப்போடு நச்சத்திரத்துழாவல்

© கலை 2005 - by Blogger Templates